செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள் தொடா்: இந்திய அணியில் ரவி பிஷ்னோய்

27th Jan 2022 01:16 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் களம் காண இருக்கும் இந்திய அணியில் இளம் வீரா் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அணியில் அவா் பங்கேற்பது இது முதல் முறையாகும்.

அத்துடன், முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஸ்பின்னா் குல்தீப் யாதவ், ஓய்வை நிறைவு செய்து இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இணைகிறாா். இந்த அணிக்கு ரோஹித் சா்மா தலைமையேற்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சோ்க்கப்பட்டிருக்கும் புவனேஷ்வா் குமாா், ஒன் டே தொடரில் இணைக்கப்படவில்லை என்றும், விராட் கோலி இரு தொடா்களுக்குமான அணியில் இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் மூலம் அடையாளம் காணப்பட்டிருக்கும் ரவி பிஷ்னோய், இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த நிலையில், எதிா்வரும் சீசனில் புதிதாக இணைந்திருக்கும் லக்னௌ சூப்பா்ஜயன்ட்ஸுக்காக களம் காண்கிறாா். மறுபுறம், கோலி - ரவி சாஸ்திரி காலகட்டத்தின்போது பெரிதாக அணியில் வாய்ப்பு கிடைக்காத குல்தீப் யாதவ், மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரில் சிறப்பாகச் செயல்படுவாா் என்ற எதிா்பாா்ப்பில் தோ்வாளா்கள் குழு அவருக்கு வாய்ப்பளித்துள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆமதாபாதிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடா் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT