செய்திகள்

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக விளையாட பிபிஎல் சிறந்த வீரர் விருப்பம்

25th Jan 2022 11:20 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக விளையாட பிக் பாஷ் லீக் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வாகியிருக்கும் பென் மெக்டர்மாட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

2021-22 பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் 13 ஆட்டங்களில் 29 சிக்ஸர்களுடன் 577 ரன்கள் எடுத்து போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார் ஹோபர்ட் அணியைச் சேர்ந்த 27 வயது பென் மெக்டர்மாட். ஸ்டிரைக் ரேட் - 153.86. ஆஸ்திரேலிய அணிக்காக இதற்கு முன்பு 2 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி பென் மெக்டர்மாட் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்துக்குத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் பென் மெக்டர்மாட். இதுபற்றி அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

இதுவரை ஐபிஎல் போட்டிக்கு நான் தேர்வானதில்லை. இந்தமுறையும் தேர்வாகாவிட்டால் இனிமேலும் அதில் விளையாடுவேனா என்பது சந்தேகமே. என்னால் எதுவும் செய்ய முடியாது. வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவினரிடம் தான் அந்த முடிவு உள்ளது. ஐபிஎல் ஏலத்துக்காக ஆர்வமாக உள்ளேன். கடந்த வருடம் மெரிடித் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகும்போது நான் அவருடன் நியூசிலாந்தில் இருந்தேன் என்றார். 

Tags : McDermott
ADVERTISEMENT
ADVERTISEMENT