செய்திகள்

கெளதம் கம்பீருக்கு கரோனா

25th Jan 2022 11:47 AM

ADVERTISEMENT

 

இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 2003 முதல் 2016 வரை 58 டெஸ்டுகள், 147 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் கெளதம் கம்பீர். ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்து தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் லக்னெள அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் கெளதம் கம்பீர். லேசான அறிகுறிகளுக்குப் பிறகு பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் என ட்விட்டரில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT