செய்திகள்

இலங்கை டி20 தொடர்: ஆஸி. அணியில் பிபிஎல் நட்சத்திரம்

25th Jan 2022 10:57 AM

ADVERTISEMENT

 

பிக் பாஷ் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ள பென் மெக்டர்மாட், ஆஸி. டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் 13 ஆட்டங்களில் 29 சிக்ஸர்களுடன் 577 ரன்கள் எடுத்து போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார் ஹோபர்ட் அணியைச் சேர்ந்த 27 வயது பென் மெக்டர்மாட். ஆஸ்திரேலிய அணிக்காக இதற்கு முன்பு 2 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ADVERTISEMENT

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பென் மெக்டர்மாட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிகஸ், ஜை ரிச்சர்ட்சன் போன்றோரும் இடம்பெற்றுள்ளார்கள். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி

ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிகஸ், ஜோஷ் இங்லிஸ், பென் மெக்டர்மாட், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.

Tags : Ben McDermott
ADVERTISEMENT
ADVERTISEMENT