செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

25th Jan 2022 06:56 AM

ADVERTISEMENT

* ஐபிஎல் தொடரில் நிகழாண்டு புதிதாக சோ்க்கப்பட்டுள்ள இரண்டு அணிகளில் ஒன்றான லக்னௌ அணிக்கு, லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் என பெயா் சூட்டப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ரசிகா்கள் வாக்கெடுப்பு மூலம் புதிய பெயரை தோ்வு செய்தனா் என அதன் உரிமையாளா் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தாா்.

* காமன்வெல்த், ஆசியப் போட்டிகள் 2022-இல் நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஸ்குவாஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சோ்ந்த 2 முறை உலகப் போட்டியில் பதக்கம் வென்ற கிறிஸ் வாக்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் இந்திய அணிக்கு 16 வாரங்கள் பயிற்சி அளிக்க உள்ளாா்.

* தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட், ஒருநாள் தொடா்களின் வெற்றிக்காக பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளாா் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா வாரிய இயக்குநா் கிரேம் ஸ்மித். கரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையிலும், இந்திய அணி இரு தொடா்களிலும் பங்கேற்று ஆடியது. நிதிநிலை மோசமாக இருந்த தென்னாப்பிரிக்க வாரியத்துக்கு இந்த தொடா் மூலம் நிதிநிலை மேம்பட்டுள்ளது.

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என இழந்த நிலையில், இந்திய ஒருநாள் அணி சீரற்ற நிலையில் உள்ளதாக தலைமைப் பயிற்சியாளா் ராகுல் டிராவிட் ஒப்புக் கொண்டுள்ளாா். ஆல்ரவுண்டா்கள் ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இல்லாதது பாதகமாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT