செய்திகள்

2021-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் தேர்வு

24th Jan 2022 04:32 PM

ADVERTISEMENT

 

கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வாகியுள்ளார்.

முக்கியமான இரு விருதுகளை வென்றுள்ள பாகிஸ்தான், பெரிய விருது ஒன்றையும் தட்டிச் சென்றுள்ளது. 2021-ம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தேர்வாகியுள்ளார். 

2021-ல் விளையாடிய 36 சர்வதேச ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஷாஹீன் அப்ரிடி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்து கவனம் பெற்றார். அவருடைய பந்துவீச்சினால் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முதலாகத் தோற்றது இந்திய அணி. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT