செய்திகள்

கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள்: 1 ரன் வித்தியாசத்தில் மே.இ. தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து

24th Jan 2022 11:22 AM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 1 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது இங்கிலாந்து அணி.

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் 45, டாம் பாண்டன் 25, மொயீன் அலி 31, கிறிஸ் ஜார்டன் 27 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 44, அகேல் ஹுசைன் 44 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற கடைசி 18 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18-வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. எனினும் கடைசி ஓவரில் வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்டன. சகிப் முகமது வீசிய அந்த ஓவரில் 3 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடித்தார் ஹுசைன். இருந்தும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மே.இ. தீவுகள் அணி. 

ADVERTISEMENT

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT