செய்திகள்

டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: மீண்டும் மோதும் இந்தியா - பாக்.

21st Jan 2022 07:56 AM

ADVERTISEMENT

 

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 இடங்களில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதில், குரூப் 2 பிரிவின் முதல் ஆட்டத்தில் அக்.23ஆம் தேதி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூப்பர் 12 சுற்றில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை, மேற்கு வங்கம், நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி சுற்றில் பங்கேற்கவுள்ளன.

மெல்போர்னில் நவம்பர் 13ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT