செய்திகள்

முதல் சுற்றில் சிந்து வெற்றி

DIN

லக்னௌ: சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

இப்போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முயற்சியில் இருக்கும் சிந்து, மகளிா் ஒற்றையா் பிரிவில் தனது முதல் சுற்றில் சக இந்தியரான தான்யா ஹேம்நாத்தை 21-9, 21-9 என்ற நோ் கேம்களில் 27 நிமிஷங்களில் சாய்த்தாா். அடுத்த சுற்றில் அவா் அமெரிக்காவின் லௌரென் லாமை எதிா்கொள்கிறாா். எனினும், இப்பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீ கிருஷ்ணப்பிரியா குதரவள்ளி 13-21, 13-21 என்ற நோ் கேம்களில் தாய்லாந்தின் சுபானிடா கடேதோங்கிடம் வெற்றியை பறிகொடுத்தாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், சிரக் சென் 21-9, 21-6 என்ற கணக்கில் சக இந்தியரான அன்சல் யாதவை 23 நிமிஷங்களில் வென்றாா். மிதுன் மஞ்சுநாத் 21-15, 21-8 என்ற கேம்களில் அலாப் மிஸ்ராவை 34 நிமிஷங்களில் தோற்கடித்தாா். சிரில் வா்மா 19-21, 21-13, 18-21 என்ற கேம் கணக்கில் ரகு மாரிசுவாமியிடம் தோல்வி கண்டாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் எம்.ஆா்.அா்ஜூன்/டிரீசா ஜாலி ஜோடி 21-8, 21-13 என்ற கேம் கணக்கில் மற்றொரு இந்திய இணையான கௌரவ் தேஷ்வால்/அனுபா கௌஷிக்கை 18 நிமிஷங்களில் சாய்த்தது. அதே பிரிவில் போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருக்கும் வெங்கட் கௌரவ் பிரசாத்/ஜூஹி தேவாங்கன் இணை 21-18, 21-7 என்ற கேம்களில் ஷிதிஷ் தியாகி/மெய்னி போருவா ஜோடியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT