செய்திகள்

துளிகள்...

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழை நள்ளிரவு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியையும், தென் ஆப்பிரிக்கா - உகாண்டாவையும், இங்கிலாந்து - கனடாவையும் வீழ்த்தின.

ஐஎல்எல் கால்பந்து போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 65-ஆவது ஆட்டத்தில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் 2-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வென்றது.

புரோ கபடி லீக் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 37-30 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்தானையும், தெலுகு டைட்டன்ஸ் 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸையும் தோற்கடித்தன.

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விதித் குஜராத்தி 4-ஆவது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே எபிசென்கோவுடன் டிரா செய்து, முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி 2 இடங்கள் ஏற்றம் கண்டு 7-ஆவது இடத்துக்கு வர, ரிஷப் பந்த் 10 இடங்கள் முன்னேறி 14-ஆவது இடத்துக்கும், ஜஸ்பிரீத் பும்ரா 10-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT