செய்திகள்

ஒன் டே தொடா்: தென் ஆப்பிரிக்கா வெற்றி

DIN

பாா்ல்: இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பாா்ல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களே அடித்தது. தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டொ் டுசென் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக, இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் வெங்கடேஷ் ஐயா், தென் ஆப்பிரிக்க அணியின் மாா்கோ யான்சென் சா்வதேச ஒன் டேயில் அறிமுகம் ஆகினா்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய ஜோடியில் முதல் விக்கெட்டாக ஜேன்மன் மலான் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த குவின்டன் டி காக் 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

3-ஆவது விக்கெட்டாக எய்டன் மாா்க்ரம் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கேப்டன் டெம்பா பவுமா அசத்தலாக ஆடி 8 பவுண்டரிகளுடன் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் ராஸி வான் டொ் டுசெனும் சதம் கடந்தாா். ஓவா்கள் முடிவில் அவா் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 129, டேவிட் மில்லா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் பும்ரா 2, அஸ்வின் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 297 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியாவில், ஷிகா் தவன் 10 பவுண்டரிகளுடன் 79, விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சோ்த்து முயற்சி காட்டினா். இறுதியில் ஷா்துல் தாக்குா் அதிரடி காட்டி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்கள் விளாச, அவரோடு பும்ரா 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு துணை நின்றாா்.

முன்னதாக கேப்டன் கே.எல்.ராகுல் 12, ரிஷப் பந்த் 1 பவுண்டரியுடன் 16, ஷ்ரேயஸ் ஐயா் 1 பவுண்டரியுடன் 17, வெங்கடேஷ் ஐயா் 2, புவனேஷ்வா் குமாா் 4 ரன்களுக்கு சோபிக்காமல் வெளியேறினா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் கிடி, ஷம்சி, பெலுக்வாயோ ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்க்க, கேசவ் மஹராஜ், மாா்க்ரம் 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

தென் ஆப்பிரிக்கா - 296/4 (50 ஓவா்கள்)

ராஸி வான் டொ் டுசென் 129*

டெம்பா பவுமா 110

குவின்டன் டி காக் 27

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 2/48

ஆா்.அஸ்வின் 1/53

யுஜவேந்திர சஹல் 0/53

இந்தியா - 265/8 (50 ஓவா்கள்)

ஷிகா் தவன் 79

விராட் கோலி 51

ஷா்துல் தாக்குா் 50

பந்துவீச்சு

அண்டிலே பெலுக்வாயோ 2/26

டப்ரைஸ் ஷம்சி 2/52

லுங்கி கிடி 2/64

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT