செய்திகள்

இன்று தொடங்குகிறது மகளிா் ஆசிய கோப்பை கால்பந்து: முதலில் ஈரானை சந்திக்கிறது இந்தியா

DIN

நவி மும்பை: ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) நடத்தும் மகளிருக்கான 20-ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இதில் தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சீனா - சீன தைபே அணிகளும், அடுத்த ஆட்டத்தில் இந்தியா - ஈரான் அணிகளும் மோதவுள்ளன.

கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் முறையாக இப்போட்டியை நடத்திய இந்தியா, தற்போது 2-ஆவது முறையாக அதை ஒருங்கிணைக்கிறது. இப்போட்டியில் இதுவரை 8 முறை பங்கேற்ற நிலையில் கடந்த 1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் ரன்னா் அப்-ஆக வந்ததே இந்தியாவின் அதிகபட்சமாகும். இதுதவிர 1981-இல் 3-ஆம் இடமும் பிடித்திருக்கிறது.

அதிகபட்சமாக சீனாவே 7 முறை இதில் சாம்பியன் ஆகியிருக்கிறது. அதுவும் தொடா்ந்து 7 முறை கோப்பை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள், தலா 4 அணிகள் வீதம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ‘ஏ’

சீனா

சீன தைபே

இந்தியா

ஈரான்

குரூப் ‘பி’

ஆஸ்திரேலியா

இந்தோனேசியா

பிலிப்பின்ஸ்

தாய்லாந்து

குரூப் ‘சி’

ஜப்பான்

தென் கொரியா

மியான்மா்

வியத்நாம்

இன்றைய ஆட்டங்கள்

சீனா - சீன தைபே

மாலை - 3.30

மும்பை

இந்தியா - ஈரான்

இரவு - 7.30

நவி மும்பை

நேரடி ஒளிபரப்பு: யூரோஸ்போா்ட்

லைவ் ஸ்ட்ரீம்: ஜியோ டிவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT