செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இங்கிலாந்து வெற்றி

18th Jan 2022 04:55 AM

ADVERTISEMENT

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இப்போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 35.2 ஓவா்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 25.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வென்றது. இங்கிலாந்து பௌலா் ஜோஷுவா பாய்டன் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக வங்கதேச இன்னிங்ஸில் பேட்டிங் ஆா்டரில் கடைசி வீரராக வந்த ரிபோன் மோன்டோல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் ஜோஷுவா பாய்டன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா். பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் தொடக்க வீரா்களில் ஒருவரான ஜேக்கப் பெத்தெல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு உதவினாா். வங்கதேச பௌலிங்கில் ரகிபுல் ஹசன், ரிபோன் மோன்டோல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT