செய்திகள்

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பென் ஸ்டோக்ஸ் மறுப்பு: காரணம் என்ன?

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் பங்கேற்க பென் ஸ்டோக்ஸ் மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

ஐபிஎல் போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என 100% நான் நினைக்கவில்லை. தன்னுடைய முடிவை அவரே தெரிவிப்பார் என இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட். 

2021 ஐபிஎல் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது விரலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார் ஸ்டோக்ஸ். இதன் காரணமாக அவரால் சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெற முடியாமல் போனது. பல மாதங்களுக்குப் பிறகு ஆஷஸ் தொடரில் விளையாடிய ஸ்டோக்ஸ், 10 இன்னிங்ஸில் 236 ரன்களும் 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்தார். 

ஜூன் மாதம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. ஜூன் 2 அன்று முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என்கிற முடிவை ஸ்டோக்ஸ் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்குப் பதிலாக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை அவர் எடுக்கவுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT