செய்திகள்

டிஎன்பிஎல்: தமிழக வீரர் தெரிவித்த மேட்ச் ஃபிக்ஸிங் புகார்!

18th Jan 2022 04:32 PM

ADVERTISEMENT

 

கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் வழங்க முயன்றதாக பிசிசிஐ, ஐசிசியிடம் தமிழக வீரர் ராஜகோபால் சதீஷ் புகார் அளித்துள்ளார். 

2021 டிஎன்பிஎல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் 41 வயது ராஜகோபால் சதீஷ். அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் போட்டியில் மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளில் விளையாடிய ராஜகோபால் சதீஷ், மேட்ச் ஃபிக்ஸிங் புகார் ஒன்றை பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகச் சமூகவலைத்தளம் வழியாகத் தனக்கு ஒருவர் ரூ. 40 லட்சம் தர முயன்றதாக அவர் புகாரளித்துள்ளார். 

இதுபற்றி பிசிசிஐ ஊழல் தடுப்பு குழுவின் தலைவர் ஷபிர் கூறியதாவது:

ADVERTISEMENT

இந்த மாதம் எங்களிடமும் ஐசிசியிடம் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த புகாரை ராஜகோபால் சதீஷ் தெரிவித்தார். சமூகவலைத்தளம் வழியாக அவருக்குப் பணம் தர முயன்றுள்ளார்கள். காவல்துறையிடம் இதுபற்றி புகார் அளிக்கக் கூறினோம். அவர் அதைச் செய்துள்ளார். இனிமேல் காவல்துறை இதுபற்றி விசாரிக்கும். அவர் இப்போது ஏன் புகார் அளித்துள்ளார் எனக் கேட்கிறீர்கள். நிலைமை எதுவாக இருந்தாலும் அதைக் காவல்துறை விசாரிப்பதே சரி. அவர் புகாரளிக்க முன்வந்தால் சரியான வழியைக் காண்பிப்பதே எங்கள் வேலை எனக் கூறினார். 

41 முதல் தர ஆட்டங்களிலும் 57 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் ராஜகோபால் சதீஷ் விளையாடியுள்ளார். 

Tags : IPL TNPL
ADVERTISEMENT
ADVERTISEMENT