செய்திகள்

தெ.ஆ. ஒருநாள் தொடர்: சஹாலைப் பின்னுக்குத் தள்ளி அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

ச. ந. கண்ணன்

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின், உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் தேர்வானார். இரு டி20 ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியினரின் பாராட்டையும் பெற்றார். 

இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகியுள்ளார். 

கடைசியாக 2017 ஜூனில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார் அஸ்வின். இப்போது மீண்டும் ஒருநாள் அணியில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 35 வயது அஸ்வின் 2010 முதல் இதுவரை 111 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே. (கடந்த முறை இந்திய அணியின் எல்லா ஆட்டங்களிலும் குல்தீப், சஹால் விளையாடினார்கள்.) இதனால் அஸ்வின், சஹால் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றாலும் முதல் இரு தேர்வுகளில் அவருடைய பெயர் இடம்பெறாது.

2019 ஆகஸ்டுக்குப் பிறகு 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள சஹால், 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனினும் 2020 நவம்பரில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரு ஒருநாள் ஆட்டங்களிலும் சேர்த்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். ரன்களும் அதிகளவில் கொடுத்தார். இதனால் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை. தவன் தலைமையில் இலங்கை சென்றபோது இரு ஒருநாள் ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தியா 2017-18-ல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றபோது 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. குல்தீப், சஹால் ஆகிய இருவரும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி முறையே 17, 18 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி 5-1 என வெற்றி பெற உதவினார்கள். இதனால் சஹாலை அணியில் சேர்க்கவும் இந்திய அணி எண்ண வாய்ப்புண்டு.

எனினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அஸ்வின். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் முழுமையாக ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வினுக்கு முதலில் வாய்ப்பு வழங்கவே டிராவிடும் கே.எல் ராகுலும் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT