செய்திகள்

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 46.5 ஓவா்களில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ஆடிய தென் ஆப்பிரிக்கா 45.4 ஓவா்களில் 187 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 11 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் விளாசினாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் மேத்யூ போஸ்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸில் டிவால்ட் பிரெவிஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 65 ரன்கள் அடித்தாா். இந்திய பௌலிங்கில் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்திய விக்கி ஆஸ்த்வல் ஆட்டநாயகன் ஆனாா்.

அமீரகம், ஜிம்பாப்வே, அயா்லாந்து வெற்றி: 2-ஆம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் 49 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவையும், அயா்லாந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவையும், ஜிம்பாப்வே 228 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியையும் வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT