செய்திகள்

கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல: கோலி முடிவு பற்றி கெளதம் கம்பீர்

DIN

கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல என விராட் கோலியின் முடிவு பற்றி முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார் விராட் கோலி. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்போது துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் விராட் கோலியின் முடிவு பற்றி முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இதில் புதிதாக ஒன்றும் இல்லை. கேப்டன் பதவி என்பது யாருடைய பிறப்புரிமையும் அல்ல. கேப்டன் பதவியை கோலிக்கு அளித்த எம்.எஸ். தோனி, அவருடைய தலைமையில் விளையாடவும் செய்தார். இத்தனைக்கும் 3 ஐசிசி கோப்பைகள், 4 ஐபிஎல் கோப்பைகளை தோனி வென்றுள்ளார். இனி ரன்கள் எடுக்க கோலி முயலவேண்டும். அதுதான் முக்கியம். இந்திய அணிக்காக விளையாட எண்ணும்போது கேப்டன் பதவிக்காக யாரும் கனவு காண மாட்டீர்கள். இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களிக்க கனவு காண்பீர்கள். இப்போது இது எதுவும் மாறப் போவதில்லை. டாஸ் நிகழ்வுக்குச் செல்ல மாட்டீர்கள், ஃபீல்டர்கள் எங்கு நிற்க வேண்டும் என முடிவெடுக்க மாட்டீர்கள். மற்றபடி நாட்டுக்காக விளையாடுவது பெருமைக்குரியது என்பதால் உங்களுடைய ஆர்வம் மாறப்போவதில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT