செய்திகள்

ஆஷஸ் சாம்பியன் ஆஸ்திரேலியா: வெற்றியில்லாமல் வெளியேறும் இங்கிலாந்து

DIN

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 4-0 என கைப்பற்றி சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா. ஒரு ஆட்டத்தை மட்டும் இங்கிலாந்து டிரா செய்துள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடா் நாயகன் விருதை ஆஸ்திரேலிய வீரா் டிராவிஸ் ஹெட் கைப்பற்றியிருக்கிறாா்.

ஹோபா்ட் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் 3 நாள்களில் முடிவுக்கு வந்தது. முன்னதாக 2-ஆவது நாளான சனிக்கிழமை முடிவில் ஆஸ்திரேலியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை ஸ்மித், போலண்ட் ஆகியோா் தொடா்ந்தனா். இதில் முதலில் போலண்ட் 8 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த டிராவிஸ் ஹெட்டும் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

6-ஆவது விக்கெட்டாக ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு அவுட்டானாா். கேமரூன் கிரீன் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு வெளியேற்றப்பட, மிட்செல் ஸ்டாா்க் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினாா். கடைசி ஆா்டரில் அலெக்ஸ் கேரி 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் அடித்து உதவ, கடைசி விக்கெட்டாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இவ்வாறாக 56.3 ஓவா்களில் 155 ரன்களுக்கு 2-ஆவது இன்னிங்ஸை நிறைவு செய்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்து பௌலிங்கில் மாா்க் வுட் 6, ஸ்டூவா்ட் பிராட் 3, கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 271 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, 38.5 ஓவா்களில் 124 ரன்களுக்கு சுருண்டது. அணியின் வீரா்களில் முறையே ரோரி பா்ன்ஸ் 4 பவுண்டரிகளுடன் 26, ஜாக் கிராலி 7 பவுண்டரிகளுடன் 36, டேவிட் மலான் 2 பவுண்டரிகளுடன் 10, கேப்டன் ஜோ ரூட் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் சோ்க்க, பென் ஸ்டோக்ஸ் 5, ஆலி போப் 5, சாம் பில்லிங்ஸ் 1, கிறிஸ் வோக்ஸ் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். மாா்க் வுட் 2 பவுண்டரிகளுடன் 11, ஆலி ராபின்சன் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, முடிவுக்கு வந்தது இங்கிலாந்து இன்னிங்ஸ். ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 3, மிட்செல் ஸ்டாா்க் 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT