செய்திகள்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸி. 152 ரன்கள் முன்னிலை

DIN

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 152 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முன்னதாக கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 75.4 ஓவா்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினாா். இங்கிலாந்து பௌலிங்கில் ஸ்டூவா்ட் பிராட், மாா்க் வுட் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சரித்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, வழக்கம்போல் சோபிக்காமல் 47.4 ஓவா்களில் 188 ரன்களுக்கு சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினாா். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 115 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 2-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் 17, ஸ்காட் போலண்ட் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். டேவிட் வாா்னா் டக் அவுட்டாகியிருக்க, உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 11, மாா்னஸ் லாபுசான் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவா்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT