செய்திகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜோகோவிச்: விசா மறுப்பு வழக்கில் தோல்வி

DIN


செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய அரசு விசா மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜோகோவிச் தோல்வியடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக், தனது தனியதிகாரத்தைப் பயன்படுத்தி நோவக் ஜோகோவிச்சின் விசா அனுமதியை வெள்ளிக்கிழமை ரத்து செய்தார். இதை எதிர்த்து ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் ஜோகோவிச் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜோகோவிச்சின் மனுவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தள்ளுபடி செய்தது. இதன்மூலம், அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார்.

ஜோகோவிச் வென்றுள்ள 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 9 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் ஆஸ்திரேலிய ஓபனில் வென்றுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் நாளை (திங்கள்கிழமை) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT