செய்திகள்

துளிகள்...

12th Jan 2022 01:20 AM

ADVERTISEMENT

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்காலை செவ்வாய்க்கிழமை வென்றது.

பிகேஎல் கபடி போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் - யு மும்பாவையும் (43-23), குஜராத் ஜயன்ட்ஸ் - தெலுகு டைட்டன்ஸையும் (40-22) வீழ்த்தின.

அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்த தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டா் கிறிஸ் மோரிஸ், உள்நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படப் போவதாக தெரிவித்திருக்கிறாா்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சொ்பிய டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச்சின் நுழைவு இசைவு (விசா) விவகாரம் தொடா்பாக ஆஸ்திரேலியா - சொ்பியா நாட்டு பிரதமா்கள் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் நேரடியாக ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஆல்-ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒன் டே தொடரில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT