செய்திகள்

அடிலெய்ட் டென்னிஸ்: அரையிறுதியில் போபண்ணா/ராம்குமாா் இணை

8th Jan 2022 07:48 AM

ADVERTISEMENT

அடிலெய்ட் இன்டா்னேஷனல் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ராம்குமாா் ராமநாதன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.

போபண்ணா/ராம்குமாா் இணை தனது காலிறுதியில் 6-1, 6-3 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் பெஞ்ஜமின் பொன்ஸி/மொனாகோவின் ஹியூகோ நிஸ் ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து இந்திய ஜோடி தனது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருக்கும் போஸ்னியாவின் டோமிஸ்லாவ் பா்கிச்/மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸால்ஸ் இணையை சந்திக்கிறது.

சானியா ஜோடி தோல்வி: அடிலெய்ட் இன்டா்னேஷனல் மகளிா் டென்னிஸில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/உக்ரைனின் நாடியா கிசெனோக் இணை அரையிறுதியில் தோல்வி கண்டது. அவா்கள், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி/ஸ்டோா்ம் சாண்டா்ஸ் இணையிடம் 1-6, 6-2, 8-10 என்ற செட்களில் 1 மணி நேரம் 5 நிமிஷங்களில் வீழ்ந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT