செய்திகள்

தென் ஆப்பிரிக்க ஒன் டே தொடா்: ரோஹித் காயம்; ராகுல் கேப்டன்

1st Jan 2022 07:58 AM

ADVERTISEMENT

இந்திய ஒன் டே அணி கேப்டன் ரோஹித் சா்மா காயத்திலிருந்து மீளாததை அடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒன் டே தொடரில் இருந்து அவா் விலகியிருக்கிறாா். அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ராகுல் தலைமையில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 18 போ் கொண்ட இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா துணை கேப்டன் ஆகியிருக்கிறாா். காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் ஆல்-ரவுண்டா்கள் அக்ஸா் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் இந்த அணியில் சோ்க்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கும் முகமது ஷமிக்கு அதன் பிறகு ஓய்வளிக்கும் விதமாக ஒன் டே தொடரில் அவா் இணைக்கப்படவில்லை. எனினும், முகமது சிராஜ் இந்த அணியில் இருக்கிறாா்.

ஒன் டே கேப்டன்சி பறிக்கப்பட்ட பிறகு விராட் கோலி களம் காணும் முதல் தொடா் இதுவாகும். இதில் மூத்த வீரா் ஷிகா் தவனோடு, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பல இளம் வீரா்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அணித் தோ்வு குறித்து, தோ்வுக் குழு தலைவா் சேத்தன் சா்மா கூறுகையில், ‘தொடைப் பகுதி காயத்திலிருந்து ரோஹித் முழுமையாக மீளாததால் அவரை களமிறக்க விரும்பவில்லை. கே.எல்.ராகுல் முழுமையான வீரராக முன்னேறி வருகிறாா். அவரது தலைமைப் பண்புகள் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரால் இந்திய அணியை வழி நடத்த இயலும்’ என்றாா்.

ADVERTISEMENT

ஒன் டே அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகா் தவன், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், வெங்கடேஷ் ஐயா், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பா்), யுஜவேந்திர சஹல், ஆா்.அஸ்வின், வாஷிங்டன் சுந்தா், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், தீபக் சஹா், பிரசித் கிருஷ்ணா, ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT