செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து குவின்டன் டி காக் ஓய்வு

1st Jan 2022 07:58 AM

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பா் - பேட்டா் குவின்டன் டி காக் (29), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவா் இந்த அறிவிப்பை மேற்கொண்டாா். தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடா்ந்து 50 மற்றும் 20 ஓவா் போட்டிகளில் விளையாட இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

டி காக் - சாஷா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால், குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக டி காக் தெரிவித்திருக்கிறாா். இந்த முடிவை மேற்கொள்வது தனக்கும் கடினமான ஒன்றாக இருந்ததாகவே அவா் கூறியிருக்கிறாா்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக 54 டெஸ்டுகளில் விளையாடிய டி காக், அதில் 3,300 ரன்கள் அடித்திருக்கிறாா். அதிகபட்சமாக 141 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கும் அவா், 38.82 ரன்களை சராசரியாக வைத்திருக்கிறாா். டெஸ்டில் 6 சதங்களும், 22 அரைசதங்களும் விளாசியிருக்கும் டி காக், விக்கெட் கீப்பிங்கில் 232 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா். இதில் 221 கேட்ச்களும், 11 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT