செய்திகள்

மேட் ஹென்றி 7 விக்கெட்டுகள்: முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற நியூசி. அணி!

17th Feb 2022 03:10 PM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இன்று தொடங்கியுள்ள டெஸ்ட் தொடர், மார்ச் 1 அன்று நிறைவுபெறுகிறது.

கிறைஸ்ட்சர்ச்சில் முதல் நாளன்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கடைசியில் அது சரியான முடிவாகவும் அமைந்தது.

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க அணி, 49.2 ஓவர்கள் மட்டும் விளையாடி 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேட் ஹென்றி அட்டகாசமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹம்ஸா அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராகக் குறைந்த ரன்களை தெ.ஆ. அணி எடுத்துள்ளது. 

இதன்பிறகு விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 36 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிகோல்ஸ் 37, நீல் வாக்னர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க, 21 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து. தெ.ஆ. அணி வீரர்கள் 4 கேட்சுகளை நழுவவிட்டு ஏமாற்றம் அளித்துள்ளார்கள். இந்தச் சூழலில் முதல் டெஸ்டை வெற்றி பெற தெ.ஆ.  அணி கடுமையாக முயற்சி எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT