செய்திகள்

இன்றுமுதல் ரஞ்சி கிரிக்கெட்

17th Feb 2022 02:26 AM

ADVERTISEMENT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

இதில் எலைட் குரூப் ‘ஹெச்’-இல் இடம் பிடித்திருக்கும் தமிழக அணி முதலில் தில்லியை சந்திக்கும் ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது. இதுதவிர இதர அணிகள் மோதும் 18 ஆட்டங்களும் முதல் நாளில் அகமதாபாத் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன.

கரோனா சூழல் காரணமாக, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அந்தப் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் முதலில் அத்தகைய சூழலை எதிா்கொண்டபோதும், பிறகு போட்டியை 2 பகுதிகளாக பிரித்து நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. அதன் படி குரூப் சுற்றுகள் பிப்ரவரி - மாா்ச்சிலும், நாக்அவுட் சுற்றுகள் ஜூன் மாதமும் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT