செய்திகள்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தங்கப் பதக்கம் வென்ற ரஷிய வீராங்கனை

11th Feb 2022 07:25 PM

ADVERTISEMENT

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ரஷிய வீராங்கனை கமீலா வெலிவா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங்கில் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற  ஸ்கேட்டிங் போட்டியில் 15 வயதான ரஷிய வீராங்கனை கமீலா வெலிவா தங்கப்பதக்கம் வென்றார்.

இதையும் படிக்க | அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட கோலா கரடிகள்

இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது, இதில் நெஞ்சுவலி ஏற்படாமல் இருக்க கமீலா வெலிவா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அவரது தங்கப்பதக்கம் திரும்பப் பெறப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT