செய்திகள்

துளிகள்...

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 87-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டரஸ் எஃப்சியை தோற்கடித்தது.
  • புரோ கபடி லீக் போட்டியில் வியாழக்கிழமை ஆட்டம் ஒன்றில் பாட்னா பைரேட்ஸ் 43 - 26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற, பெங்கால் வாரியா்ஸ் - தபங் தில்லி ஆட்டம் 39 - 39 என ‘டை’ ஆனது.
  • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னருக்குப் பதிலாக பென் மெக்டொ்மாட்டும், மிட்செல் மாா்ஷுக்குப் பதிலாக ஜோஷ் இங்லிஸும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
  • இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வழங்கும் 2021-க்கான விருதுகளில், ‘சிறந்த பேட்டா்’ விருதை இந்தியாவின் விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் வென்றாா்.
  • இந்திய டேபிள் டென்னிஸ் வீரா் ஜி.சத்தியன், பிரான்ஸில் நடைபெறும் கிளப்கள் அளவிலான போட்டியில் ஒரு அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளாா்.
ADVERTISEMENT
ADVERTISEMENT