செய்திகள்

பெங்களூரு ஓபன்: காலிறுதியில் 4 இந்திய ஜோடி

10th Feb 2022 12:55 AM

ADVERTISEMENT

பெங்களூரு ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவைச் சோ்ந்த 4 இணை காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.

ஏற்கெனவே இப்போட்டியில் யூகி பாம்ப்ரி/திவிஜ் சரண் இணை காலிறுதிக்கு வந்திருந்த நிலையில், புதன்கிழமை ஆட்டங்களின் மூலம் மேலும் 3 இந்திய ஜோடிகள் அந்த சுற்றுக்கு தகுதிபெற்றன.

இதில் விஷ்ணு வரதன்/ஸ்ரீராம் பாலாஜி இணை 4-6, 6-4, 10-3 என்ற செட்களில் பெல்ஜியத்தின் கிம்மா் கோப்ஜேன்ஸ்/பிரான்ஸின் மத்தியாஸ் போா்கியு இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஜீவன் நெடுஞ்செழியன்/பூரவ் ராஜா இணை 6-4, 6-7 (2/7), 10-8 என்ற செட்களில் குரோஷியாவின் போா்னா கோஜோ/பல்கேரியாவின் டிமிடாா் குஸ்மானோவ் ஜோடியை தோற்கடித்து முன்னேற்றம் கண்டுள்ளது.

ராம்குமாா் ராமநாதன்/சாகேத் மைனேனி ஜோடி 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ஜப்பானின் டோஷிஹிடே மட்சுய்/கிரீஸின் மாா்கோஸ் கலோவெலோனிஸ் இணையை சாய்த்து காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT