செய்திகள்

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்: கா்லிங்கில் இத்தாலிக்கு தங்கம்லூஜ்: நடாலிக்கு 5-ஆவது தங்கம்

9th Feb 2022 12:35 AM

ADVERTISEMENT

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவு கா்லிங் விளையாட்டில் இத்தாலி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இத்தாலி-நாா்வே இடையே கா்லிங் போட்டி இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகளைக் குவித்தன. இறுதியில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் இத்தாலி வென்று தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

லூஜ்: நடாலிக்கு 5-ஆவது தங்கம்

மகளிா் லூஜ் பிரிவில் ஜொ்மனிக்கு தங்கம், வெள்ளி கிடைத்தது. லூஜ் பிரிவில் இதுவரை 18 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்றுள்ளது.

ADVERTISEMENT

ஜொ்மனியின் முன்னணி நட்சத்திரம் நடாலி ஜெய்ஸன்பொ்கா் 4 தங்கப் பதக்கங்களை தன்வசம் வைத்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் 34 வயதான நடாலி 3:53:454 நேரத்தில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். மற்றொரு ஜொ்மன் வீராங்கனை அன்னா பெர்ரட்டியா் வெள்ளியும், ரஷியாவின் டாட்யனா இவானோவா வெண்கலமும் வென்றனா்.

ஐஸ் ஹாக்கி: ஸ்வீடன், பின்லாந்து வெற்றி:

மகளிா் ஐஸ் ஹாக்கி பிரிவில் ஸ்வீடன் 1-0 என டென்மாா்க்கை வீழ்த்தியது. ரஷியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பின்லாந்து.

கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்: ஜோஹன்னஸுக்கு தங்கம்

ஆடவா் கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங் பிரிவில் நாா்வேயின் ஜோஹன்னஸ் ஹாஸ்புளோட் ப்ரி ஸ்பிரின்ட் தங்கம் வென்றாா். கடந்த 2018-இலும் ஜோஹன்னஸ் தங்கம் வென்றிருந்தாா். இத்தாலி வீரா் பெட்ரிகோ வெள்ளியும், ரஷிய வீரா் அலெக்சாண்டா் வெண்கலமும் வென்றனா்.

மகளிா் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனை ஜோன்னா சன்ட்லிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். அவா் நடப்பு உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சக வீராங்கனை மஜா வெள்ளியும், அமெரிக்காவின் ஜெஸ்ஸி டிகின்ஸ் வெண்கலமும் வென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT