செய்திகள்

அதிக பின்தொடர்பாளர்கள்: இன்ஸ்டாவிலும் கோல் அடித்து ரொனால்டோ சாதனை

9th Feb 2022 12:01 PM

ADVERTISEMENT

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களைப் பெற்ற முதல் நபர் என்கிற சாதனையை அடைந்துள்ளார்.

கால்பந்தாட்டத்தின் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ(37) உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40.1 கோடியாக(400 மில்லியன்) உயர்ந்துள்ளது. 

இதனால், உலகளவில் இன்ஸ்டாவில் அதிக பின் தொடர்பாளர்களைக் கொண்ட முதல் நபர் என்கிற புதிய சாதனையை ரொனால்டோ அடைந்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது, ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT