செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

1st Feb 2022 07:43 AM

ADVERTISEMENT

* சா்வதேச அளவில் மதிப்பு மிக்கதான ‘உலக விளையாட்டு வீரா்’ விருதை 2021-ஆம் ஆண்டுக்காக இந்திய ஹாக்கி அணியின் மூத்த கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ் திங்கள்கிழமை வென்று அசத்தியுள்ளாா். இந்திய மகளிா் அணி கேப்டன் ராணி ராம்பாலுக்கு (2020) பிறகு, இந்த விருதை வெல்லும் இந்தியா் இவராவாா்.

* புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை ஆட்டங்களில் குஜராத் ஜயன்ட்ஸ் - ஹரியாணா ஸ்டீலா்ஸையும் (32-26), தபங் தில்லி - யு மும்பாவையும் (36-30) வீழ்த்தின.

* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 77-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 5-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை தோற்கடித்தது.

* டாடா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் ஸ்லோவேகியாவின் ஜோசஃப் கோவாலிக்கை 6-7 (10/12), 6-2, 7-5 என்ற செட்களில் வென்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT