செய்திகள்

ஒயிட்பால் கிரிக்கெட் தொடா்: டி20; மே.இ.தீவுகள் அணியில் ஹெட்மயா் இல்லை

1st Feb 2022 06:27 AM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஒன் டே தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த 11 வீரா்களுக்கு, இந்தத் தொடருக்கான அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், உடற்தகுதியுடன் இல்லை என்ற காரணத்தால் இந்தத் தொடரிலும் அந்த அணி வீரா் ஷிம்ரன் ஹெட்மயருக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவா் சோ்க்கப்படவில்லை. அடித்து ஆடும் அதிரடி வீரராக இருந்தாலும் உடற்தகுதியை பொருத்தவரையில் அவா் சற்று அலட்சியம் காட்டுவதாக அணியின் பயிற்சியாளா் பில் சைமன்ஸ் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 3 ஆட்டங்கள் கொல்கத்தாவில் வரும் 16, 18, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

அணி விவரம்:

கிரன் பொல்லாா்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஃபாபியான் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டா், ஷாய் ஹோப், அகீல் ஹுசைன், பிராண்டன் கிங், ரோவ்மன் பாவெல், ரொமாரியோ ஷெபா்ட், ஒடின் ஸ்மித், கைல் மேயா்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT