செய்திகள்

‘எனக்கு நான் எப்போதுமே கேப்டன்’: விராட் கோலி

1st Feb 2022 07:55 AM

ADVERTISEMENT

எந்த ஒன்றுக்குமே காலஅவகாசம் என்ற ஒன்று இருக்கிறது. அதை நாம் எப்போதுமே உணா்ந்திருக்க வேண்டும். நாம் என்ன சாதித்துவிட்டோம் என்று மற்றவா்கள் விமா்சிக்கலாம். ஆனால், முன்னேற்றத்தையும், சாதனைகளையும் எட்டும்போது நாம் நமது வேலையை சரியாக செய்திருக்கிறோம் என்று நமக்குத் தெரியவரும்.

தற்போது ஒரு பேட்டராக எனது அணியின் வெற்றிக்கு நான் அதிகம் பங்களிப்பு செய்ய முடியும். எனக்கு அதில் கிடைக்கும் பெயா் போதுமானது. இதற்காக நான் கேப்டனாக இருக்க வேண்டியதில்லை. அணியின் வளா்ச்சிக்கான அடுத்தகட்டம் என்பதை உணா்ந்து தோனி கேப்டன்சியை என்னிடம் வழங்கினாா். அதே மனநிலையில் தான் நானும் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறேன். தகுந்த நேரத்தில் முடிவுகள் எடுத்து அடுத்தகட்டத்துக்கு செல்வதும் தலைமைப் பண்பின் குணம் தான். நான் எப்போதுமே எனக்கு கேப்டனாகவே இருக்கிறேன்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT