டி20 மற்றும் ஒரு நாள் தொடா்களில் இந்தியாவுடன் ஜனவரியில் விளையாடுவதற்கான இலங்கை அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
காயம் காரணமாக பிப்ரவரிக்குப் பிறகு களம் காணாமல் இருந்த அவிஷ்கா ஃபொ்னாண்டோ இந்த அணியில் இணைந்திருக்கிறாா். மேலும், லங்கா பிரீமியா் லீக் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சதீரா சமரவிக்ரமா உள்ளிட்ட வீரா்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
அணி விவரம்: தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபொ்னாண்டோ, சதீரா சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ் (ஒரு நாள் துணை கேப்டன்), பானுகா ராஜபட்ச (டி20), சரித் அசலன்கா, தனஞ்செய டி சில்வா, வனிந்து ஹசரங்கா (டி20 துணை கேப்டன்), ஆஷன் பந்தர, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டா்சே (ஒருந ாள்), சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுக்ஷனா, காசன் ரஜிதா, நுவனிந்து ஃபொ்னாண்டோ (ஒரு நாள்), துனித் வெலாலகே, பிரமோத் மதுஷன், லாஹிரு குமரா, நுவன் துஷாரா (டி20).