செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த ஆவலாக உள்ளோம்: எம்சிஜி

29th Dec 2022 08:44 PM

ADVERTISEMENT

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரினை நடத்த ஆஸ்திரேலியா ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடின. அதன்பின், இந்தியா-பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உலகின் வெப்பமான நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை: காலநிலை மாற்றம் காரணமா?

ADVERTISEMENT

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியைக் காண மெல்போர்ன் மைதானத்தில் 90,293 பேர் குவிந்தனர். இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியினை நடத்தத் தயாராக இருப்பதாக எம்சிஜி கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து மெல்போர்ன் மைதானத்தின் முதன்மை இயக்குநர் ஃபாக்ஸ் ஸ்டூவர்ட் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடரினை நடத்த நாங்கள் ஆவலாக உள்ளோம். டெஸ்ட் போட்டிகளை மெல்போர்னில் காண்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இரு அணிகளையும் இணைத்து நடத்துவது சிறிது கடினமான காரியம். அதனால், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது சவாலனதாகவே இருக்கும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT