தென்னாப்பிரிக்காவில் வரும் 2023-இல் நடைபெறவுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
15 போ் கொண்ட இந்த அணியில் ஆச்சா்யப்படத்தக்க வகையில், மூத்த வேகப்பந்துவீச்சாளரான ஷிகா பாண்டே சோ்க்கப்பட்டுள்ளாா். கடைசியாக அவா் 2021 அக்டோபரில் விளையாடியிருந்தாா்.
உலகக் கோப்பை போட்டியானது பிப்ரவரி 10 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. கடந்த 2020 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது.
உலகக் கோப்பை அணி: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்லீன் தியோல், தீப்தி சா்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்குா், அஞ்சலி சா்வானி, பூஜா வஸ்த்ரகா், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே. ரிசா்வ்: ஸ்னேஹ ராணா, மேக்னா, மேக்னா சிங்.