செய்திகள்

7-வது ஐபிஎல் அணியில் விளையாடவுள்ள இரு இந்திய வீரர்கள்!

DIN

ஐபிஎல் 2023 போட்டியில் இரு இந்திய வீரர்கள் தங்களுடைய 7-வது அணியில் விளையாடவுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து 80 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். 

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பையும் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்கு லக்னெளவும் தேர்வு செய்தன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது.

இந்த ஏலத்தில் மனிஷ் பாண்டேவை ரூ. 2.40 கோடிக்கு தில்லி அணியும் உனாட்கட்டை ரூ. 50 லட்சத்துக்கு லக்னெள அணியும் தேர்வு செய்துள்ளன. இருவரும் 7-வது ஐபிஎல் அணியில் விளையாடவுள்ளார்கள். 

இதற்கு முன்பு வேறு எந்த இந்திய வீரரும் 6 ஐபிஎல் அணிகளுக்கு மேல் விளையாடியதில்லை. ஐபிஎல் போட்டியில் அதிக அணிகளில் விளையாடியவர், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச். 9 அணிகள்.

மேலும் ஏலத்தில் 11 முறை பங்கேற்று தேர்வாகியுள்ளார் உனாட்கட். வேறு எந்த வீரரும் 11 முறை ஏலத்தில் பங்கேற்றதில்லை. 

மனிஷ் பாண்டே விளையாடிய 6 அணிகள் - ஆர்சிபி, புணே, கேகேஆர், மும்பை, சன்ரைசர்ஸ், லக்னெள. 

உனாட்கட் விளையாடிய 6 அணிகள்: தில்லி, கேகேஆர், மும்பை, புணே, ராஜஸ்தான், ஆர்சிபி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT