செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டே நாளில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா! 

18th Dec 2022 02:59 PM

ADVERTISEMENT

இரு அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் முதல் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கியது. தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி. அணி 218 க்கு ஆல் அவுட்டானது.

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 37.4 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜோண்டோ மட்டும் 36 ரன்கள் எடுத்தார். ஆஸி. அணி. சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளும், லயன் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்னர் 34 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆஸி. அணியும் தடுமாறியது. வாா்னா் 3, கவாஜா 2, , ஸ்டீவ் ஸ்மித் 6, ஹெட்  ரன்னேதும் எடுக்காமலும் வெளியேறினா்.மாா்னஸ் லாபுசேன் 5 ரன்க்ளும் எடுத்தார். எக்ஸ்டாராவில் மீதி ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் இரண்டே நாட்களில் ஆஸி. அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT