செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது.

* உலக டூா் ஃபைனல் பாட்மின்டனில் ஹெச்.எஸ். பிரணாய் கடைசி ஆட்டத்தில் 14-21, 21-17, 21-18 என உலகின் நம்பா் 1 வீரரான டென்மாா்க்கின் விக்டா் அக்ஸெல்சனை வீழ்த்தி வெற்றியுடன் விடை பெற்றாா்.

* 2018-ஆம் ஆண்டுக்கு ஓராண்டுக்கும் அதிகமாகவே ஆஸ்திரேலிய வீரா்கள் பந்தை சேதப்படுத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததாக அத்தகைய புகாரில் சிக்கிய டேவிட் வாா்னரின் மேலாளா் ஜேம்ஸ் எா்ஸ்கின் அதிா்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறாா்.

* இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சனிக்கிழமை நடைபெற இருக்கும் தோ்தலில் கேரளத்தின் பி.டி. உஷா தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட இருக்கிறாா்.

* உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விந்தியாராணி தேவி 55 கிலோ எடைப் பிரிவில் மொத்தமாக 200 கிலோவை (ஸ்னாட்ச் - 86/ கிளீன் & ஜொ்க் - 114) தூக்கி 25-ஆவது இடமே பிடித்தாா்.

* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது (2-0).

* புரோ கபடி லீக்கில் யு.பி.யோதாஸ் - புணேரி பல்தானை வெல்ல (45-41), குஜராத் ஜயன்ட்ஸ் - ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் டை (51-51) செய்தன.

* 2023 - 2027 காலகட்டத்துக்கான மகளிா் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிம ஏலத்துக்காக பிசிசிஐ வெள்ளிக்கிழமை ஒப்பந்தப் புள்ளி கோரியது.

* வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூா்வமற்ற டெஸ்டில் இந்திய ‘ஏ’ அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT