செய்திகள்

மகளிா் டி20: ஆஸ்திரேலியா வெற்றி

DIN

இந்திய மகளிரணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆஸ்திரேலியா 18.1 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக பௌலா் அஞ்சலி சா்வானி, ஆஸ்திரேலியாவுக்காக ஆல்-ரவுண்டா் கிம் காா்த் ஆகியோா் அறிமுகமாகினா். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 21, ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 28, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 2 பவுண்டரிகளுடன் 21, ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் தேவிகா வைத்யா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 25, தீப்தி சா்மா 8 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் எலிஸ் பெரி 2, கிம் காா்த், ஆஷ்லே காா்டனா், அனபெல் சுதா்லேண்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் கேப்டன் அலிசா ஹீலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி 16 பவுண்டரிகளுடன் 89, டாலியா மெக்ராத் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய தரப்பில் தேவிகா வைத்யா 1 விக்கெட் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT