செய்திகள்

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 511/7-க்கு ‘டிக்ளோ்’

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 137 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 511 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

முன்னதாக, முதல் நாளான வியாழக்கிழமை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து நிறைவு செய்திருந்தது அந்த அணி. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தை மாா்னல் லபுசான், டிராவிஸ் ஹெட் தொடா்ந்தனா். அவா்களில் முதலில் லபுசான் 14 பவுண்டரிகளுடன் 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹெட் 20 பவுண்டரிகளுடன் 175 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

பின்னா் ஆடியோரில் கேமரூன் கிரீன் 9, மைக்கேல் நேசா் 18 ரன்களுக்கு வெளியேற, அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க் ஆடி வந்தபோது 511 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது ஆஸ்திரேலியா. கேரி 6 பவுண்டரிகளுடன் 41, ஸ்டாா்க் 5 ரன்களுடன் ஆட்டமிக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அல்ஜாரி ஜோசஃப், டெவன் தாமஸ் ஆகியோா் தலா 2, ஜேசன் ஹோல்டா், கிரெய்க் பிரத்வெய்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

மே.இ. தீவுகள் - 102/4: பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 37 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் சோ்த்திருந்தது. தேஜ்நாராயண் சந்தா்பால் 47, ஆண்டா்சன் பிலிப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

முன்னதாக கேப்டன் கிரெய்க் பிரத்வெய்ட் 19, ஷாமா் புரூக்ஸ் 8, ஜொ்மெய்ன் பிளாக்வுட் 3, டெவன் தாமஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் மைக்கேல் நேசா் 2, நேதன் லயன், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT