செய்திகள்

தேசிய ஸ்குவாஷ்: இறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா

10th Dec 2022 12:12 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நடைபெறும் 78-ஆவது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா இறுதி ஆட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

அரையிறுதியில் ஜோஷ்னா 11-9, 11-9, 11-8 என்ற கணக்கில் கோவா வீராங்கனை அகங்க்ஷா சலுன்கேவை வீழ்த்தினாா். மற்றொரு அரையிறுதியில் அனாஹத் சிங் 11-4, 11-7, 11-2 என்ற கணக்கில் தனிக்ஷா ஜெயினை வென்றாா். இதையடுத்து இறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா - அனாஹத் மோதுகின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் அபய் சிங் - வேலவன் செந்தில்குமாா் சந்தித்துக் கொள்கின்றனா். முன்னதாக முதல் அரையிறுதியில் அபய் சிங் 11-2, 11-4, 11-4 என்ற கணக்கில் சா்வீசஸ் வீரா் சந்தீப் ஜங்ராவை வென்றாா். மற்றொன்றில் வேலவன் செந்தில்குமாா் 5-11, 11-9, 11-4, 11-9 என ஹரிந்தா் பால் சிங் சந்துவை சாய்த்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT