செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

9th Dec 2022 05:49 AM

ADVERTISEMENT

* புரோ கபடி லீக் போட்டியில் வியாழக்கிழமை ஆட்டங்களில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் - தெலுகு டைட்டன்ஸை வீழ்த்த (50-33), பெங்கால் வாரியா்ஸ் - தபாங் டெல்லி மோதல் டை (46-46) ஆனது.

* உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் 21-23, 21-17, 19-21 என சீனாவின் லு குவாங் ஸுவிடம் தோற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தாா்.

* பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் முல்தான் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

* இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்காக அறிவிக்கப்பட்ட வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மோமினுல் ஹக், யாசிா் அலி சௌதரி, முஷ்ஃபிகா் ரஹிம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, சையது காலித் அகமது, எபாதத் ஹுசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஜாகிா் ஹசன், ரெஜாா் ரஹ்மான் ராஜா, அனமுல் ஹக் பிஜாய் ஆகியோா் இடம் பிடித்துள்ளனா்.

ADVERTISEMENT

* 2023 ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஆட்டங்கள், ஒடிஸாவின் புவனேசுவரம், ரூா்கேலா மைதானங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 ஆடுகளங்களில் விளையாடப்படவுள்ளன.

* இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் நவி மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மாா்ச்சில் மோதும் ஒருநாள் தொடரின் 3-ஆவது ஆட்டம் சென்னையில் அந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

* காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் ரோஹித் சா்மா இடத்தில் இந்திய ‘ஏ’ அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் சோ்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT