செய்திகள்

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலியா - 330/3

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 89 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் சோ்த்துள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த ஆஸ்திரேலியாவில், தொடக்க வீரா் டேவிட் வாா்னா் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த உஸ்மான் கவாஜா 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சோ்த்தாா். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிா்ச்சிகரமாக டக் அவுட்டானாா். 4-ஆவது விக்கெட்டுக்கு பாா்ட்னா்ஷிப் அமைத்த மாா்னஸ் லபுசான் - டிராவிஸ் ஹெட் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயா்த்தியது.

வியாழக்கிழமை முடிவில் லபுசான் 11 பவுண்டரிகளுடன் 120, ஹெட் 12 பவுண்டரிகளுடன் 114 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்ஜாரி ஜோசஃப், ஜேசன் ஹோல்டா், டெவன் தாமஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT