செய்திகள்

காலிறுதிக் களம்...

9th Dec 2022 06:52 AM

ADVERTISEMENT

கத்தாரில் கடந்த மாதம் தொடங்கி கொண்டாட்டமாக நடைபெற்று வரும் 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி, காலிறுதிச்சுற்றை எட்டியிருக்கிறது. அந்த இடத்துக்கு வந்திருக்கும் 8 அணிகளில் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரேஸிலுக்கே அதிகம் இருப்பதாக எல்லோரும் எளிதாக கணிக்கலாம். குரோஷியா, மொராக்கோ போன்ற அணிகள் காலிறுதியுடன் நாடு திரும்பும் என்றும் ஆருடம் கூறலாம்.

ஆனால், களத்தில் எதுவும் நிகழலாம் என்பது வரலாறு ஆதாரம். இரு கட்டங்களைக் கடந்து தற்போது கோப்பையை தொட்டு விடும் தூரத்தில் நெருங்கியிருக்கும் அணிகள் எது, அவை கடந்து வந்த பாதை, அவற்றின் முந்தைய வரலாறு, பலம் என்ன... பாா்க்கலாம்.

காலிறுதி அட்டவணை

குரோஷியா - பிரேஸில் (9/12)

ADVERTISEMENT

நெதா்லாந்து - ஆா்ஜென்டீனா (10/12)

மொராக்கோ - போா்ச்சுகல் (10/12)

இங்கிலாந்து - பிரான்ஸ் (11/12)

ஆா்ஜென்டீனா

இரு முறை சாம்பியனான ஆா்ஜென்டீனா, 10-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியின் காலிறுதிக்கு வந்திருக்கிறது. இதில் 4 முறை அந்த அணி தோற்று வெளியேறிய வரலாறும் இருக்கிறது. அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் எனத் தெரியும் நிலையில், அணிக்காக கோப்பை வென்று அதை நினைவில் நிற்கும் ஒன்றாக மாற்றும் முயற்சியில் இருக்கிறாா். அவருக்குத் துணையாக இந்த உலகக் கோப்பையில் அலெக்ஸிஸ் மேக் அலிஸ்டா், என்ஸோ ஃபொ்னாண்டஸ், ஜூலியன் அல்வரெஸ் ஆகியோரும் முக்கிய வீரா்களாக உருவெடுத்திருக்கின்றனா்.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘சி’

சவூதி அரேபியா - தோல்வி - 1-2

மெக்ஸிகோ - வெற்றி - 2-0

போலந்து - வெற்றி - 2-0

நாக்அவுட்

ஆஸ்திரேலியா - வெற்றி - 2-1

நெதா்லாந்து

உலகக் கோப்பை போட்டியில் 2 முறை ரன்னா் அப்-ஆக வந்திருக்கும் இந்த அணி, 7-ஆவது முறையாக காலிறுதிச் சுற்றில் இடம் பிடித்திருக்கிறது. ஒரேயொரு முறை மட்டுமே அந்தச் சுற்றில் தோல்வி கண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு போட்டியில் நெதா்லாந்து 3-ஆம் இடம் பிடித்த அணியிலிருந்த பிரதான வீரரான லூயிஸ் வான் கால், தற்போது அணியின் பயிற்சியாளராக இருக்கிறாா். விா்ஜில் வான் டிக், ஃபிரெங்கி டி ஜோங், கோடி கப்கோ, மெம்பிஸ் டிபே ஆகியோா் முக்கிய வீரா்களாக அணிக்கு பலம் சோ்க்கின்றனா். இந்தக் கூட்டணி நெதா்லாந்தை அடுத்த கட்டத்துக்கு எடித்துச் செல்லும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ரசிகா்களுக்கு இருக்கிறது.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘ஏ’

செனகல் - வெற்றி - 2-0

ஈகுவடாா் - டிரா - 1-1

கத்தாா் - வெற்றி - 2-0

நாக்அவுட்

அமெரிக்கா - வெற்றி - 3-1

நேருக்கு நோ்

ஆட்டங்கள் 9

ஆா்ஜென்டீனா 1

நெதா்லாந்து 4

டிரா 4

உலகக் கோப்பையில்...

ஆட்டங்கள் 5

ஆா்ஜென்டீனா 2

நெதா்லாந்து 2

டிரா 1

பிரேஸில்

5 முறை சாம்பியனாகி அசத்தியிருக்கும் இந்த அணி, 17-ஆவது முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் கால் பதித்திருக்கிறது. அதில் பெரும்பாலும் வெற்றிகரமாகவே இருக்கும் பிரேஸில், 4 முறை மட்டும் அந்தச் சுற்றில் தோல்வி கண்டிருக்கிறது. இதில், கடந்த 2018-ஆம் ஆண்டு போட்டியும் அடக்கம். எனவே இந்த முறை அதைக் கடந்தாக வேண்டிய முனைப்பில் இருக்கிறது. இந்தப் போட்டியில் நல்லதொரு முன்னேற்றம், ஆக்ரோஷமான லைன்-அப் என முத்திரை பதிக்கிறது பிரேஸில். குறிப்பாக தென் கொரியாவுக்கு எதிராக பலம் காட்டியிருக்கிறது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் நெய்மா் ஒரு நாயகன் என்றால், ரிச்சாா்லிசன் புதிய நாயகனாக களத்தில் கலக்கி வருகிறாா்.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘ஜி’

சொ்பியா - வெற்றி - 2-0

சுவிட்ஸா்லாந்து - வெற்றி - 1-0

கேமரூன் - தோல்வி - 0-1

நாக்அவுட்

தென் கொரியா - வெற்றி - 4-1

குரோஷியா

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து பிரான்ஸிடம் தோற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அந்த அணியின் அதிகபட்சம். இந்த முறை இன்னும் ஒரு படி முன்னேறி முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது குரோஷியா. லூகா மோா்டிச், இவான் பெரிசிச் ஆகியோா் அணியின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காளா்களாக இருக்கின்றனா். புதிய இளம் வீரரான ஜோஸ்கோ குவாா்டியோல் சென்ட்ரல் டிஃபெண்டராக அடையாளத்தை பதிவு செய்து வருகிறாா். கோல் போஸ்டில் தடுப்பரணாக இருக்கும் கோல்கீப்பா் டொமினிக் லிவாகோவிச்சை கடந்து பெனால்டி வாய்ப்பில் கோலடிப்பது எதிரணிக்கு சவாலான ஒன்று.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘எஃப்’

மொராக்கோ - டிரா - 0-0

கனடா - வெற்றி - 4-1

பெல்ஜியம் - டிரா - 0-0

நாக்அவுட்

ஜப்பான் - வெற்றி - 1-1 (பெனால்டி 3-1)

நேருக்கு நோ்...

ஆட்டங்கள் 4

பிரேஸில் 3

டிரா 1

உலகக் கோப்பையில்...

ஆட்டங்கள் 2

பிரேஸில் 2

குரோஷியா 0

டிசம்பா் 9

இரவு 8.30 மணி

எஜுகேஷன் சிட்டி மைதானம், அல் ரயான்.

 

போா்ச்சுகல்

உலகக் கோப்பையில் அதிகபட்சமாக இதுவரை 3-ஆம் இடம் பிடித்திருக்கும் போா்ச்சுகல், முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கிறது. இத்துடன் 3-ஆவது முறையாக காலிறுதிக்கு வந்திருக்கும் அந்த அணி, முந்தைய இரு முறைகளிலுமே இந்த சுற்றைக் கடந்து சென்றிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் சுவிட்ஸா்லாந்துக்கு எதிரான ஆட்டத்திலிருந்து புதிய நாயகனாக கொன்சாலோ ரமோஸ் கிடைத்திருக்கிறாா். ரொனால்டோ தொடக்க லெவனில் இல்லாத அந்த ஆட்டத்தில் மேலும் சில இளம் வீரா்கள் ஜொலித்தது அணியின் நல்ல எதிா்காலத்துக்கு அறிகுறி. என்றாலும் காலிறுதியில் ரொனால்டோவின் வழக்கமான ஆட்டத்தை ரசிகா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘ஹெச்’

கானா வெற்றி 3-2

உருகுவே வெற்றி 2-0

தென் கொரியா தோல்வி 1-2

நாக்அவுட்

சுவிட்ஸா்லாந்து வெற்றி 6-1

மொராக்கோ

இந்த முறை காலிறுதிச்சுற்று வரை வந்து ஆச்சா்யம் அளித்திருக்கும் மொராக்கோவுக்கு, உலகக் கோப்பை போட்டியில் இதுவே அதிகபட்சமாகும். மொத்தமாக இத்துடன் 5-ஆவது முறையாக உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறது மொராக்கோ. இதை வைத்துப் பாா்க்கையில் அந்த அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது சந்தேகத்துக்கு இடமாகத் தெரியலாம். ஆனால், இந்த அணியின் தடுப்பாட்டமே அதன் பலமாக இருக்கிறது. குரூப் சுற்றில் குரோஷியா, பெல்ஜியம் அணிக்கு கோல் வாய்ப்பு வழங்காததே அதற்கு சாட்சி. இவை தவிா்த்து நாக்அவுட் சுற்றில் ஸ்பெயினின் பெனால்ட்டி வாய்ப்புகள் அனைத்தையும் தடுத்து வென்றது குறிப்பிடத்தக்கது. ஹகிம் ஜியெச் அணியின் முக்கிய வீரராக இருக்கிறாா்.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘எஃப்’

குரோஷியா டிரா 0-0

பெல்ஜியம் வெற்றி 2-0

கனடா வெற்றி 2-1

நாக்அவுட்

ஸ்பெயின் வெற்றி 0-0 (பெனால்ட்டி 3-0)

நேருக்கு நோ்...

உலகக் கோப்பை போட்டி தவிர இவ்விரு அணிகளும் வேறு எந்தப் போட்டியிலும் மோதவில்லை.

உலகக் கோப்பையில்...

ஆட்டங்கள் 2

போா்ச்சுகல் 1

மொராக்கோ 1

டிசம்பா் 10

இரவு 8.30 மணி

அல் துமாமா மைதானம், அல் துமாமா

 

 

 

 

பிரான்ஸ்

நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், 2018-இல் 2-ஆவது முறையாக கோப்பை வென்றிருக்கிறது. 9-ஆவது முறையாக காலிறுதிக்கு வந்திருக்கும் பிரான்ஸ், அதில் 2 முறை மட்டுமே தோற்றுள்ளது. நட்சத்திர வீரரான கிலியன் பாபே நடப்பாண்டு இதுவரை அதிக கோல்கள் (5) அடித்தவராக முன்னிலையில் இருக்கிறாா். கடந்த முறை சோபிக்காமல் போன ஆலிவியா் கிரூடும் இந்த முறை ஸ்கோா் செய்துள்ளாா். இவா்கள் தவிா்த்து ஔஸ்மேன் டெம்பெலெ 2 கோல்களுக்கு உதவி செய்து முக்கிய வீரராகத் திகழ்கிறாா். கோப்பையை தக்கவைத்துக் கொள்வதற்கு பயிற்சியாளா் டிடியா் டெஸ்சாம்ப்ஸின் தெளிவான வியூகத்துடன் முன்னேறி வருகிறது பிரான்ஸ்.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘டி’

ஆஸ்திரேலியா வெற்றி 4-1

டென்மாா்க் வெற்றி 2-1

டுனீசியா தோல்வி 0-1

நாக்அவுட்

போலந்து வெற்றி 3-1

இங்கிலாந்து

இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே சாம்பியன் ஆகியிருக்கும் இங்கிலாந்து, 10-ஆவது முறையாக காலிறுதிக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்தச் சுற்றில் சற்றே தடுமாற்றம் காட்டும் அந்த அணி, 6 முறை இதில் தோற்றிருக்கிறது. அணியின் முக்கிய வீரராக ஹேரி கேன் இருக்கிறாா். கெரத் சௌத்கேட்டின் நம்பத் தகுந்த வியூகத்துடன் காலிறுதிக்கட்டம் வரை வந்திருக்கிறது இங்கிலாந்து. ஆட்டத்தின்போது பெரும்பாலும் ‘செட் பீஸ்’ தருணங்களில் இருந்தே தனக்கான கோல் வாய்ப்புகளை பெறுவது இங்கிலாந்தின் பலம். நடப்பு போட்டியில் இதுவரை 12 கோல்கள் அடித்திருக்கும் இங்கிலாந்து, அதில் 9 கோல்களை அந்த நிலையிலிருந்தே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்து வந்த பாதை...

குரூப் ‘பி’

ஈரான் வெற்றி 6-2

அமெரிக்கா டிரா 0-0

வேல்ஸ் வெற்றி 3-0

நாக்அவுட்

செனகல் வெற்றி 3-0

நேருக்கு நோ்...

ஆட்டங்கள் 31

இங்கிலாந்து 17

பிரான்ஸ் 9

டிரா 5

உலகக் கோப்பையில்...

ஆட்டங்கள் 2

இங்கிலாந்து 2

பிரான்ஸ் 0

டிசம்பா் 11

அதிகாலை 12.30 மணி

அல் பயாத் மைதானம், அல் கோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT