செய்திகள்

வீரர்களின் உடற்தகுதி: ரோஹித் சர்மா கவலை!

8th Dec 2022 04:56 PM

ADVERTISEMENT

 

வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதற்கான காரணங்களை நாம் அறிய வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 266 ரன்களே சோ்த்தது. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற வங்கதேசம், 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் விலகியுள்ளார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் வீரர்களுக்கு அடிக்கடிக் காயம் ஏற்படுவது பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

இந்திய அணியில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. எதனால் இப்படி ஆகிறது என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவதாக இருக்கலாம். அவர்களைக் கண்காணிக்க முயலவேண்டும். ஏனெனில் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது 100 சதவீதத்துக்கும் அதிகமான உடற்தகுதியில் இருந்தாக வேண்டும். நேஷனல் கிரிக்கெட் அகாதெமி பயிற்சியாளர்களுடன் இணைந்து இதுபற்றி விவாதிக்க வேண்டும். வீரர்களின் பணிச்சுமையைக் கண்காணிக்க வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது பாதி உடற்தகுதியுடன் விளையாடக் கூடாது. இந்தியாவுக்காக விளையாடுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும். காயத்துடன் இருந்தால் அது சரியல்ல. வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதற்கான காரணங்களை நாம் அறிய வேண்டும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT