செய்திகள்

3-வது ஒருநாள்: மூன்று இந்திய வீரர்கள் விலகல்!

DIN

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து காயம் காரணமாக மூன்று இந்திய வீரர்கள் விலகியுள்ளார்கள்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 266 ரன்களே சோ்த்தது. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற வங்கதேசம், 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் விலகியுள்ளார்கள்.

2-வது ஒருநாள் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ரோஹித் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச இன்னிங்ஸில் கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். இதன்பிறகு காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரோஹித் சர்மா, 9-வது பேட்டராகக் களமிறங்கி 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து போராடித் தோற்றார். இதையடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்திலிருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார். மேலும் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 

நேற்று மூன்று ஓவர்கள் மட்டும் வீசிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், அதன்பிறகு காயம் காரணமாகப் பந்துவீசவில்லை. குல்தீப் சென் காயம் காரணமாக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. 

விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா  உடனடியாக மும்பைக்குச் சென்று மருத்துவர்களைச் சந்திக்கவுள்ளதாக பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார். காயத்திலிருந்து குணமாகி டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்பது குறித்து தனக்குத் தெரியாது. இப்போதே அதுகுறித்து முடிவெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

SCROLL FOR NEXT