செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேச அணி அறிவிப்பு

8th Dec 2022 04:17 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது இந்திய அணி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் சனியன்று நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டுக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன்  தலைமையிலான அணியில் முஷ்ஃபிகுர் ரஹிம், யாசிர் அலி, டஸ்கின் அஹமது ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள். சில காரணங்களால் இம்மூவரும் வங்கதேச அணியின் முந்தைய டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இடக்கை பேட்டர் ஜாகிர் ஹசன் முதல்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிராக ஒருமுறை கூட டெஸ்டில் வென்றதில்லை வங்கதேச அணி. 11 ஆட்டங்களில் 9-ல் தோல்வியடைந்து 2 டெஸ்டுகளை டிரா செய்துள்ளது. 

வங்கதேச டெஸ்ட் அணி

ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மோமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்ஃபிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், நுருல் ஹசன், மெஹித் ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமது, கலீத் அஹமது, எபடாட் ஹுசைன், ஷொரிஃபுல் இஸ்லாம், ஸாகிர் ஹுசைன், ரஹ்மான் ராஜா, அனமுல் ஹக். 

Tags : India Test
ADVERTISEMENT
ADVERTISEMENT